god prised betel and Arica nut news
நம் வீட்டில் செவ்வாய்க் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இறைவனுக்கு, பூ, பழம், பால், வெற்றிலை பாக்கு வைத்து நெய்வேத்தியம் செய்வது வழக்கம். அதே போல் முக்கிய விரத நாட்களில் கூட வெற்றி பாக்கு வைத்து படைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
இப்படி சுவாமிக்கு படைக்கப்படும், வெற்றிலை பாக்கை வீட்டில் யாரவது பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கு கொடுப்போம். அல்லது அருகில் இருக்கும் யாருக்காவது கொடுப்போம் அப்படி செய்வது தவறும் இல்லை.
ஆனால் தற்போது நகரங்களில் வாழும் பலருக்கு வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் பலருக்கு இல்லை. அப்படிப் பட்டவர்கள் பசு மாட்டிற்கு வெற்றிலைப் பாக்கை கொடுக்கலாம். 
பசுமாட்டிக்கு தரும் சூழல் உங்களுக்கு இல்லை என்றால், வெற்றிலையை கால் படாத இடத்தில் வைத்து விடுங்கள். ஆனால் குப்பை தொட்டியில் மட்டும் போடாதீர்கள் அது மிகவும் பாவமாம்.
