1 கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் 2 கிலோ அரிசி இலவசம்..! 

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக ஒரு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.

அதன்படி ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களை வழங்கி இரண்டு கிலோ அரிசியை பெற்றுக் கொள்ளலாம் என அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளதற்கு அம்மாவட்ட மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

சமீபகாலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்காகவும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பேராபத்து குறித்து மக்களிடையே அரசு மற்றும் ஒரு சில அமைப்புகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு இன்னும் சென்றடையவில்லை என்பதற்கு உதாரணமாக இன்றளவும் ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதை வைத்து பார்த்தால் நிரூபணம் ஆகிறது. 

இதனையும் தடுக்கும் பொருட்டு அனந்தபூர் மாவட்ட கலெக்டர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்து கொடுத்து 2 கிலோ அரிசியை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார் ஆட்சியர் சத்தியநாராயணனின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் எதிர்பார்த்தபடி பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியரின் இத்தகைய நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு குவிந்தவண்ணம் உள்ளது