girls weared vetti sattai in college

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு,விடுமுறை காரணமாக பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களில் பொங்கல் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை ஜெயின் கல்லூரி பொங்கல் கொண்டாட்டத்தில் மாணவிகள் வேட்டி கட்டி வந்து அசத்தினர்....

இதன் ஒரு பகுதியாக கல்லூரிகளில், உரி அடித்தல், பொங்கல் பொங்குதல்,வண்ணமயமான கோலம் இடுதல் என அனைத்திலும் உற்சாகமாக கலந்துக்கொண்டு என்ஜாய் செய்கின்றனர்

பொங்கலை முன்னிட்டு மாணவ மாணவிகள் கலாச்சார உடை அணிந்து வந்துள்ளனர். அதன்படி,ஆண்கள் வேட்டி சட்டையும்,பெண்கள் சேலையையும் அணிந்து வந்திருந்தனர்.

ஆனால்,பெண்கள் வேட்டி சட்டை அணிந்து வந்து அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்க செய்தனர்.

சென்னை ஜெயின் கல்லூரி மாணவிகளின் வேட்டை சட்டை போட்டோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.