ஆணா...? பெண்ணா...? கண்டறிய வந்துவிட்டது “புதிய இயந்திரம்”.........!!!
முட்டைக்குள் இருக்கும் குஞ்சு, ஆண் குஞ்சா ? பெண் குஞ்சா ? என தெரிந்துகொள்ள, அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த கோழிப்பண்ணை நிறுவனத்துக்காக இஸ்ரேலைச் சேர்ந்த நோவாட்ரான்ஸ் என்ற நிறுவனம் ‘டெராஎக்’ என்ற புதிய இயந்திரத்தைத் தயாரித்துள்ளது.
அதாவது, முட்டையின் மேல் ஓட்டில் உள்ள நுண்ணிய துளைகளிலிருந்து வெளிவரும் ஒருவித வாசனையைக் கொண்டு இதனைக் கண்டுபிடிக்கலாம் என்று இயந்திரத்தைத் தயாரித்துள்ள நோவாட்ரான்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதன் மூலம், முட்டையிலிருந்து குஞ்சு வெளிவரும் முன்பே அது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை பயன்படுத்தி, முட்டைக்குள் இருக்கும் போதே, அது ஆண் குஞ்சா அல்லது பெண் குஞ்சா என கண்டுபிடிக்க முடியும்.
இந்த இயந்திரத்தின் பயன்பாடு, வரும் 2017ஆம் ஆண்டின் இறுதிக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
