காதலன் கண் முன்னே துடி துடித்து இறந்த காதலி..! 

சேலம் ஏற்காடு பகுதியில் வசித்து வரும் ரவிராய் என்பவருடைய மகள் ஆர்த்தி திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் மாணவர் அசோக் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் ஏற்கனவே ரூபாய் 3 லட்சம் மதிப்பில் ஆசை ஆசையாய் வாங்கி இருந்த மோட்டார் சைக்கிளை கொண்டுவந்து தன் காதலியுடன் இருசக்கர வாகனத்தில் வெளியில் செல்ல திட்டமிட்டு இருந்துள்ளார். அதன்படி பெங்களூருக்கு புறப்பட்ட அவர்கள் போகும் வழியில் ஆர்த்திக்கு இருசக்கர வாகனத்தை கற்றுக்கொடுக்க முற்பட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தான் ஓட்டி வந்த  இருசக்கர வாகனத்தை முன்னாள் சென்ற வாகனம் மீது மோதியதில் அவர்களும் கீழே விழுந்துள்ளனர். மேலும் ஆர்த்தியும் சாலையின் வலப்பக்கம் விழுந்துள்ளார். அசோக் சாலையில் இடப்பக்கம் விழுந்துள்ளார். அப்போது ஆர்த்தி வலப்பக்கமாக விழுந்த அதே தருணத்தில் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அசோக் காயங்களுடன் தன் கண் முன்னே காதலி இறந்த சம்பவத்தை பார்த்து கதறி துடித்து என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்