ஒன்றரை வயது பெண் குழந்தையை ரயிலில் ஏற்றிவிட்டு செய்வதறியாது திகைத்து நின்று உள்ளார் தந்தை.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பரன். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பொள்ளாச்சியில் தங்கி டைல்ஸ் ஒட்டும் வேலைபார்த்து வருகிறார். இதற்கிடையில் தன் ஊர் செல்வதற்காக தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கோவை ரயில் நிலையம் வந்தவர், திருவனந்தபுரம்-நியூடெல்லி எக்ஸ்பிரசில் முன்பதிவு பெட்டியில் குடும்பத்துடன் ஏறி உள்ளனர்.

பின்னர் அந்த ரயில் ஈரோட்டை கடக்கும் போது, டிக்கெட் பரிசோதகர் சொஸ்தனை செய்து  அவர்களை பெட்டி மாறி ஏற சொல்லி உள்ளனர். பின்னர் ஈரோட்டில் இறங்கிய இந்த குடும்பத்தினர், முன்பதிவு செய்யாத பெட்டியில் என்ற வேகமாக சென்று உள்ளார். பின்னர் ஒரு வழியாக அருகில் வந்த உடன், முதலில் தனது ஒன்றரை வயது குழந்தையை பெட்டியில் ஏற வைத்து, அதன் பின் தான் கொண்டு வந்திருந்த ஒரு பையை பெட்டியில் வைத்து உள்ளார்.

அதற்குள் வண்டி வேகமாக நகர்ந்துள்ளது. பின்னர் பதறி சென்ற இவர்கள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். போலீசார் எடுத்த நடவடிக்கைக்கு பின்னர் சேலத்தில் அக்குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.