Asianet News TamilAsianet News Tamil

தத்தெடுப்பதில் பெண் குழந்தைகளுக்கே மவுசு அதிகம்...! காரணமும் புள்ளி விவரத்தையும் நீங்களே பாருங்க..! அசந்துடுவீங்க.!

கடந்த மூன்று ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் பெண் குழந்தைகளே அதிகம் என மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

girl babe adopdation level is 60 percent in india
Author
Chennai, First Published Feb 13, 2019, 7:04 PM IST

தத்தெடுப்பதில் பெண் குழந்தைகளுக்கே மவுசு அதிகம்...! காரணமும் புள்ளி விவரத்தையும் நீங்களே பாருங்க..! அசந்துடுவீங்க.! 

கடந்த மூன்று ஆண்டுகளில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் பெண் குழந்தைகளே அதிகம் என மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பொதுவாகவே பெற்றோர்கள் தங்களுக்கு ஆண் வாரிசு கிடைக்க வேண்டும் என ஆசைபடுவது உண்டு ஆனால் குழந்தை இல்லாத பல பெற்றோர்கள் தத்து எடுக்கும் போது பெண் குழந்தைகளை தத்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

girl babe adopdation level is 60 percent in india

இந்திய அளவில் ஆண் குழந்தைகளின் பிறப்பு பெண் குழந்தைகளை விட அதிகமாக இருந்தாலும் மாநிலத்திற்கு மாநிலம் சற்று வேறுபட்டு காணப்படும்.இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கடந்த 2015 இல் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் 11649 குழந்தைகள். அதில் பெண் குழந்தைகள் 6962 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு வாரியாக தத்தெடுக்கப்பட்ட  பெண் குழந்தைகளின் எண்ணிக்கை..

2015  - 3011 குழந்தைகள் - அதில் 1855 பெண் குழந்தைகள் 
2016 - 3210 குழந்தைகள் - அதில் 1915 பெண் குழந்தைகள் 
2017 - 3276 குழந்தைகள் - அதில் 1943 பெண் குழந்தைகள் 
2018 - 2152 குழந்தைகள் - அதில் 1249 பெண் குழந்தைகள் 

ஆக தத்தெடுப்பதில் 60 % பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios