Asianet News TamilAsianet News Tamil

10 மணிக்கு டான்னு வந்து நிக்கணும்..! ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் ஆர்டர்..!

அரசு ஊழியர்களும் காலை 10 மணிக்கே அலுவலகத்திற்கு வர வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்து உள்ளார்.
 
girija vaithiyanathan ordered employees to come office sharply at 10 am
Author
Chennai, First Published Jun 19, 2019, 4:39 PM IST

10 மணிக்கு டான்னு வந்து நிக்கணும்..! ஊழியர்களுக்கு கிரிஜா வைத்தியநாதன் ஆர்டர்..! 

அரசு ஊழியர்களும் காலை 10 மணிக்கே அலுவலகத்திற்கு வர வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன்னதாக, நல்லொழுக்கத்தை பாதிக்காத வகையில் ஆடைகளை அணிய வேண்டும் என தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நல்லொழுக்கத்தை பேணிக் காக்கும் வகையில் அந்த இடத்திற்கு ஏற்றவாறு முறையான ஆடைகளை சுத்தமாக அணிந்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

girija vaithiyanathan ordered employees to come office sharply at 10 am

அதன்படி தலைமை செயலக அலுவலகத்தில் பெண்கள் சல்வார் கமீஸ், துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அல்லது புடவை அணிய வேண்டும் என்றும், இதேபோன்று ஆண்களைப் பொறுத்தவரையில் சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் கேஷுவல் ஆடைகளை அணியாமல் formal ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

girija vaithiyanathan ordered employees to come office sharply at 10 am

நீதித் துறையை சார்ந்த மன்றங்களில் ஆஜராக தேவை இருந்தால் அப்போது முழு கையுடன் கூடிய டை அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், தலைமை செயலகத்தில் பணியாற்றும் கலெக்டர்கள் மற்றும் ஊழியர்கள் காலை10 மணிக்கே அலுவலகத்திற்கு வர வேண்டும் என  தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்து உள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios