காலை மாலை என இரண்டு வேளைகளில் டீ அருந்தும் பழக்கம் போய் தற்போது தேவை ஏற்படும் போதெல்லாம் டீ அருந்தும் பழக்கம் நம்மவர்களிடம் அதிகமாகியுள்ளது. அதிலும் மன இருக்கம் கொண்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு மணிக்கு ஒரு முறை டீ அருந்தியே ஆக வேண்டும்.  டீயில் பல வகை இருந்தாலும். இஞ்சி டீ குடிப்பவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். வழக்கமான டீயுடன் இஞ்சியினால் கிடைக்கும் சிறிது கார சுவை பலரையும் அந்த டீக்கு ரசிகர் ஆக்கியுள்ளது. இஞ்சி டீ குடிப்பதால் சுவை மட்டும் ஒருவருக்கு கிடைப்பதில்லை. பலரும் இஞ்சி டீயின் நன்மைகள் தெரியாமலேயே அதனை தினந்தோறும் குடித்து உடல் ஆரோக்கியத்தை பராமரித்து வருகிறார். 
  

இஞ்சி டீயால் ஏற்படும் நன்மைகளை 7 வகைகயாக பிரித்துக் கொள்ள முடியும். அவற்றை பின்வருமாறு பார்க்கலாம்.

1. நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு வயிற்றுப் பிரச்சனை ஏற்பட்டு வாந்தி மற்றும் சோர்வு ஏற்படலாம். ஆனால் இஞ்சி டீ அவ்வப்போது அருந்தினால் வாந்தி உங்களிடம் எட்டிப்பார்க்காது. சோர்வு உங்களை அணுகாது.

2. நீங்கள் அதிக அளவு சாப்பிட்டு விட்டீர்களா? அதுவும் அசைவ உணவுகளை ஒரு கட்டு கட்டிவிட்டீர்களா? கவலைப்படாதீர்கள். அரை மணி நேரம் கழித்து ஒரு கப் இஞ்சி டீ பருகிப்பாருங்கள். உங்கள் வயிற்றுக்குள் சென்று உணவு கடகடவென ஜீரனம் ஆகிவிடும்.

3.உடல் வலிக்கும் இஞ்சி டீயில் மருந்து இருக்கிறது. சரியான விகிதத்தில் இஞ்சி சேர்த்து டீயை பருகும் பட்சத்தில் உங்களுக்கு ஏற்பட்ட உடல் வலி இருந்த இடம் தெரியாமல் சென்றுவிடும்.

4. புதிய சுற்றுச் சூழல் சார்ந்த இடத்திற்கு சென்றுவிட்டீர்களா? சளித் தொல்லை இருக்கிறதா? பதற்றம் அடைய வேண்டாம். ஒரே ஒரு இஞ்சி டீயை குடித்துப் பாருங்கள் உங்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். மேலும் சளி பிடித்தவர்களுக்கும் இஞ்சி டீ இதமாக இருக்கும்.

5. இஞ்சியில் விட்டமின்கள், மினரல்கள், அமினோ அமிலங்கள் தாராளமாக உள்ளன. எனவே இஞ்சியுடன் சேர்த்து டீ பருகும் போது உங்கள் உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகும். சமயத்தில் மாரடைப்பு மற்றும் வலிப்பு போன்றவற்றை தடுக்கும் அளவிற்கு கூட இஞ்சி டீ கைகொடுக்கும்.

6. அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கும் இஞ்சியுடன் கூடிய டீ  குடிக்கும் போது உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

7. அலுவலகத்தில் மிகப்பெரிய பிரச்சனையா? வீட்டில் மனைவியுடன் சண்டையா? அதிகம் ஸ்ட்ரஸ் ஏற்படுகிறதா? அந்த சமயத்தில் இஞ்சி டீ குடித்துப் பாருங்கள், உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.