ginger eating method for good health
இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?
எது இருக்கோ இல்லையோ... உண்டு உயிர் வாழ உணவு வேண்டும் தானே.....அமாம் வேண்டும் தான் ..அதற்கென்ன இப்போ என கேட்கிறீர்களா?
ம்...விஷியதுக்கு வரேன்...நம்மில் நிறைய பேர் உடல் இளைக்க வேண்டும் என்பதற்காக பல கட்டுப்பாடுகளை கொண்டிருப்பார் அல்லவா.?
உடல் இளைக்க மட்டுமல்லாமல்,பல பயன்களை தரும் இஞ்சியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்....
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
வெறும் இஞ்சி மூலமாகவே இத்தனை பயன் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு, அதனை அதற்கேற்றவாறு சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்
