ஆண்களுக்கும் அந்த 3 நாட்கள் ரொம்ப முக்கியம் தான்..! குறித்து வைத்துக்கொள்ளுங்கள்...! 

எந்த ஒரு ஆணுக்கும் பெண் தோழியோ அல்லது மனைவியோ ஒரு சில விஷயங்களை நெருக்கமாக கூறியிருப்பார்கள். அதில் குறிப்பாக பெண்களுக்கு மிக முக்கிய நாளான மாதத்தில் அந்த மூன்று நாட்கள். அதாவது மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களிடம் பல்வேறு மாற்றங்களை மிக எளிதாக நம்மால் உணர முடியும்.

மாதவிடாய் பொறுத்த வரையில் பெண்களுக்கு மூன்று நாட்கள் முதல் அதிகபட்சமாக ஐந்து, ஆறு நாட்களில் முடிந்துவிடும் ஒரு சிலருக்கு 10 நாட்கள் வரை கூட மாதவிடாய் இருக்கும்

இதுபோன்ற தருணத்தில் பெண்கள் எப்போதும் சற்று கோபமாகவே இருப்பார்கள். உடல் அசதியாக இருக்கும். எந்த ஒரு வேலை செய்வதாக இருந்தாலும், அதில் முழுவீச்சாக ஈடுபட மாட்டார்கள். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதும் கூட கேள்விக்குறியே சின்ன விஷயமாக இருந்தாலும் கூட அதற்காக பெரிய சண்டை போடுவார்கள். இப்படி எல்லாம் ஒரு பெண்ணிடம் திடீரென மாற்றம் இருந்தால் அப்போது ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது... மாதத்தில் அந்த மூன்று நாட்கள் என்ற விபரம் மட்டுமே...

மேலும் மாதவிடாய் நேரத்தில் வயிற்றுப்பகுதியில் அதிக வலி இருக்கும். கால்வலி, உடல் வலி தலைவலி வாந்தி இது போன்ற ஒருசில அறிகுறிகள் தொடர்ந்து இருக்கும். எனவே அதற்கு ஏற்றவாறு அந்த நேரத்தில் தன் துணைக்கு பிடித்தவற்றை பேசி மென்மையாக நடந்து கொள்வது ஒரு ஆணின் கடமையாகவே எடுத்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் நேரத்தின் போது உண்ணும் உணவில் கூட சில மாற்றங்கள் இருக்கும். இதுபோன்ற தருணத்தில் சில உணவுகளை கூட வெறுப்பார்கள். குறிப்பாக எண்ணெய் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பொருட்களை வெறுப்பார்கள். இதுபோன்ற தருணத்தில் அவர்களை சாப்பிடு சாப்பிடு என துன்புறுத்த வேண்டாம். இதேபோன்று ஹார்மோன் மாற்றம் இந்த மூன்று நாட்களுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஒரு நோக்கை தன் மனைவியிடம் ஒரு ஆண்மகன் காண்பிக்கவே கூடாது.

இது போன்ற தருணத்தில் பெண்களுக்கு மிகவும் அருவருப்பான ஒரு சிந்தனை பிறக்கும். எனவே அவர்களின் அந்த ஒரு மூன்று நாட்களான மாதவிடாய் சுழற்சியின் போது அன்பாக பார்த்து ஆதரவாக நடந்து கொள்வது நல்லது.