குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்களுக்கு மட்டும்..!

நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அது நன்மைக்காக தான் இருக்கும். அதே போல அவர்கள் மேற்கொண்ட சில முறைகள் இன்றளவும் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது

ஆனால் பலரும் மாடர்ன் உலகத்திற்கு மாறி விட்டனர். பொதுவாகவே ஆனாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி வாழ்வில் ஒரு சில விஷயங்களை நாம்    மேற்கொள்ள வேண்டும்.

ஆண்கள் செய்ய கூடாதவை..!

திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தவுடன் குளிக்கக்கூடாது. சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.

ஆண்கள் கைகளால் இரண்டு கால்களையும் கட்டி உட்காரக்கூடாது.

உண்ணும் உணவை உருண்டையாக உருட்டிச் சாப்பிடக்கூடாது.

நாம் உடுத்திய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது.

ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு உட்கொள்ளக்கூடாது.

உடம்பு மற்றும் தலையிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக்கூடாது. உடனே வெளியே எறிந்து விட வேண்டும்.

தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று சவரம் செய்துகொள்ளக் கூடாது.

இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ, உட்கார்ந்து கொள்வதோ கூடாது.

இது போன்ற சிலவற்றை  நம் வாழ்வில் கடைபிடித்தால், தான் வீட்டில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.