எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு பெயர் “கங்கா ஸ்நானம்” ஏன் ?
நாளை தீபாவளி, காலை எழுந்தவுடன் , தலைக்கு நன்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் எதற்கு குளிக்கிறோம்.......ஏன் இந்த முறை பின்பற்றபடுகிறது....என்ற யோசனைக்கு பதில் இதோ.......
தீபாவளியன்று, எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம். நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்……
நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்….
கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம்…..
