Pre-wedding Shoot: தகிட தகிட தந்தான...பாடல் வரிகள் பேக்ரவுண்டில் ஓட மணக்கோலத்தில் தலைகீழாக நின்ற படி, மாப்பிளை இருக்க மணமகள் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது. 

தகிட தகிட தந்தான...பாடல் வரிகள் பேக்ரவுண்டில் ஓட மணக்கோலத்தில் தலைகீழாக நின்ற படி, மாப்பிளை இருக்க மணமகள் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிறது. 

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். அப்படியான ஒரு வேடிக்கையான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

திருமணத்தன்று எடுக்கப்போகும் புகைப்படங்களுக்கு தரப்படும் முக்கியத்துவத்தைவிட, அதற்கு முந்தைய புகைப்பட ஷீட்டிங்குத்தான் நிறைய ஜோடிகள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதற்கு நிறைய மெனக்கெடுக்கின்றனர். அதிக செலவும் செய்கிறார்கள். இன்றைய காலத்தில், திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் டிரெண்டாகி வருகின்றது. 

இவை சமூக வலைதளங்களிலும் பகிரப்படுகின்றன. சமீபத்தில் இப்படி ஒரு கல்யாண வீடியோ ஷூட் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

இந்த வேடிக்கையான வீடியோ மக்களை மிகவும் சிரிக்க வைக்கிறது. இப்பேதெல்லாம் பல திருமணங்களை புரோகிதர்களுக்கு பதிலாக போட்டோகிராபர்களால்தான் நடத்துகிறார்கள் என சிலர் கிண்டலாகக் கூறுகிறார்கள்.

இணையத்தில் வேகமாக பரவும் இந்த வீடியோ ஒரு கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒரு ஜோடி தங்கள் ப்ரீ வெட்டிங்ஷூட் எடுத்துக்கொண்டிருக்கும் போது, போட்டோகாரர் மணமகனை வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்கச் சொல்கிறார். 

Scroll to load tweet…

அதன் பின்னர், மணமகன் தலைகீழாக நின்று போஸ் கொடுக்கிறார். மணப்பெண் நடனமாடுவதைப் போல் போஸ் கொடுக்கிறார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இப்படி கூட யாராவது போஸ் கொடுப்பார்களா என்று வியப்படைகின்றனர். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை இதுவரை 100க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். மூவாயிரத்திற்கும் அதிகமான முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Scroll to load tweet…