உடலில் இரத்தம் அதிகரிக்க...இப்படி ஒரு மாற்றத்தை கொடுக்கிறதாம் "இந்த பழம்"..! 

நாம் உண்ணும் உணவு சத்தானது தானா ? என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. காரணம்...கலப்பிட உணவு, ஃபாஸ்ட்புட், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கண்பார்வை குறைபாடு, நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, வயதுக்கு மீறிய உடல் பருமன், சிறுவயதிலேயே பூ பெயர்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்...

ஆனால் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய உணவை உண்பதில் மிக மிக குறைந்த அளவிலேயே ஆர்வம் காண்பிக்கின்றனர் இன்றைய இளசுகள்... காரணம் அவர்களுடைய வேலை பளு, நேரமின்மை மற்றும் மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஃபர்ஸ்ட் ஃபுட் என அனைத்தையும் உண்கின்றனர். ஆனால் விளைவு ஆரோக்கிய பாதிப்பு தான். இதனை கொஞ்சமாவது குறைக்க காலை சிற்றுண்டிக்கு பதிலாக பழங்களை கூட எடுத்துக்கொள்ளலாம்.

அந்த வகையில் மாதுளை பழம் எடுத்துக் கொண்டால் இதன் மூலம் ரத்தம் சுத்தமாகும், புதிய ரத்தம் சுரக்கும், உடல் பலம் பெறும், எலும்புகள் பற்களில் ஏற்படும் நோயை குணமாக்கும், மலச்சிக்கலைத் தவிர்க்கும்.

தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் சுரக்கும், உடல் பலம் பெறும், தோல்களை வழுவழுப்பாக்கும், நரம்புத்தளர்ச்சியை தடுக்கும்.

திராட்சையை எடுத்துக்கொண்டால் நல்ல பசி உண்டாகும், வயிற்றுப் புண் குணமாகும், இது போன்ற பழ வகைகளை காலை நேரத்தில் உண்டு வந்தால் அந்த நாள் முழுக்க தேவையான எனர்ஜி கிடைப்பதுடன் நம் உடலுக்கு தேவையான சத்து கிடைத்துவிடும். முடிந்த அளவிற்கு வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டில் செய்யப்படும் ஆரோக்கியமான ஊட்டச்சத்தான உணவினை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

மேலும் தற்போது கோடைக்காலம் என்பதால், உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. மாறாக உடல் சூட்டை அதிகரிக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டால் தோல் பிரச்சனை, சிறுநீர்  கழிப்பதில் பிரச்சனை, உடலில் ஆங்காங்கு கட்டி ஏற்படுதல் என சொல்லிக்கொண்டே போகலாம்.