விரைவில் இலவச இன்டர்நெட் : ரொக்கமில்லா பண பரிவர்த்தனை ஊக்குவிக்க “டிராய்” அதிரடி ...!!!

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற, பிரதமரின் அதிரடி அறிவிப்புக்கு பின், இந்தியாவில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க, இலவச இன்டர்நெட் வழங்க வேண்டும் என , தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, ரொக்கமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்கும் பொருட்டு, நிதியமைச்சகமும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து தேசிய அளிவிலான கான்பரன்ஸ் ஒன்றை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த கான்பரன்ஸ் முடிந்த பின்பு, நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு கோடி பேருக்கு ,ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த , வகுப்பு எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

தற்போது டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நாம் பயணம் செய்து கொண்டிருப்பதால், கிராம மக்கள் கூட , டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு வசதியை பயன்படுத்தும் வகையில் , அவர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ,மற்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்துள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் அனைவரும் , ஸ்வைப் மெஷின் பயன்பாடு அதகரிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.