80% வரை அதிரடி சலுகையை அறிவித்தது பிளிப்கார்ட்..! 

சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் ஆஃபர்களை அதிரடியாக அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். அதன்படி வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன் வரை அனைத்து பொருட்களுக்கும் சலுகையை அறிவித்து உள்ளது.

அதன்படி "ஃப்ரீடம் சேல்"என்ற பெயரில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஸ்மார்ட்போன் வரை 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 11 ஆம் வரை இந்த சலுகை கிடைக்க பெற உள்ளது. 

இதில் குறிப்பாக அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 12 மணி முதல் ஆபர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆஃபர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி முடிகிறது. இதில் எந்தெந்த நிறுவனங்களின் தயாரிப்புகள், எந்தெந்த மாடல் மொபைல் போன்ஸ்.... எவ்வளவு ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விவரம் அமேசான் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்ளது.  

அதன் படி ஸ்மார்ட்போன்களுக்கு 6000 ரூபாய் வரையிலும்,பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு 20,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்ய உள்ளது. அதாவது மொபைல் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு 50% தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டு உபயோகப் பொருட்களான டிவி மிக்ஸி கிரைண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு 60% சலுகை வழங்க வாய்ப்பு உள்ளது.தேவைப்படுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயப்படுத்திக்கொள்ளலாம்.