வர்ததகத்தில் கொடி கட்டி பறக்கும் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டரிலும் பிரபலமானவர். அவரை லட்சக்கணக்கான பேர் டிவிட்டரில் பின்தொடருகின்றனர். 

ஆனந்த் மகிந்திராவின் டிவிட்டுகள் பெரும்பாலும், அறிவுபூர்வ, ஆக்கப்பூர்வமான மற்றும் வித்தியாசமாகவும், ஆச்சரியங்கள் அளிக்கும் விதங்களில் இருக்கும். இதற்காகவே டிவிட்டரில் அவரை பின்தொடருகிறார்கள்.

அந்த வகையில் ஆனந்த் மகிந்திரா சமீபவத்தில் போட்ட ஒரு டிவிட் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அப்படி என்ன டிவிட்ன்னு பார்க்கிறீங்களா, ஆனந்த் மகிந்திரா ஒரு ஹோட்டலின் மெனுவை பகிர்ந்துள்ளார். 

சுத்த சைவம் என்று சொல்லும் அந்த உணவகத்தின் மெனுவை பார்த்தால் அதற்கு முரணாக உள்ளது. மெனுவில், வெஜ் பிஷ் ப்ரை, வெஜ் சிக்கன் ரைஸ் மற்றும் மட்டன் தோசை என உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில், பிரம்மிக்க வைக்கும் இந்தியா உண்மையில் எப்படி இருக்கிறது என்பது ஒரு உதாரணம். ஒரு விஷயத்தின் மீது மனதின் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பல நூற்றாண்டுகளாக அறிந்து வைத்திருக்கிறோம். சைவம், அசைவம் என்ன வித்தியாசம், இது எல்லாமே மனதுதான் என அதில் பதிவு செய்து இருந்தார்.