fire in meenakshi amman temple and sentimental issue
மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
கோவிலில் தீ பிடிப்பது சென்டிமென்ட் பீல் கொடுவந்துவிடும்.அது மட்டுமில்லாமல் காவல் தெய்வமான அம்மன் கோவிலில் தீ பிடித்த சம்பவம் பற்றி பலரும் சில பல சம்பிரதாய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ மெல்ல மெல்ல பரவ சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் இரு பக்கங்களிலும் பரவியது.
அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த அலங்கார பொம்மைகள் முதல் பூஜைக்கான பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

புறாக்களும் கருகியது
இந்த தீயினால்,கோவிலில் கூடு கட்டி வாழ்ந்து வந்த புறாக்கள் அனைத்தும் தீயில் கருகி பரிதாபமாக உயிர் விட்டது.
மேலும் பல சிற்பங்கள் சேதமடைந்தன.கிழக்கு கோபுர வாசலின் மேற்கூரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

ஏன் இப்படி நடிக்கிறது...?
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக,இதே கிழக்கு பகுதி கோபுரத்தை தான் இடி தாக்கியது,அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு பெய்த மழை கோவிலுக்குள் புகுந்தது..தற்போது தீ பிடித்து உள்ளது...இப்படி ஒவ்வொன்றாய அதே இடத்தில் நடந்து வருவதால்,ஏதோ அபசகுனமா என பலரும் சிந்திக்க தொடங்கி உள்ளனர்.

2015ல் இதே பகுதியில் தான் மின்னல் தாக்கி மேற்கூரை சேதம் அடைந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி மதுரையில் பெய்த மழை கிழக்கு கோபுரம் வழியாக புகுந்த மழை நீர் சுவாமி சன்னதியை சூழ்ந்தது. இப்படி அடுத்துடுத்து கிழக்கு கோபுரம் பாதிக்கப்படுவதால் சகுனத்தடையாக இருக்குமா என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
