படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ..! பதற்றத்தில் சாலி கிராமம்..! 

சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடந்த இடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு நடக்காத நிலையில் ஏற்பட்ட தீ விபத்தால் படப்பிடிப்பு தளத்தின் மேல் தளம்  தீயில் கருகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் கீழே விழுந்து 3 பேர் உயிர் இழந்துள்ள நிலையில், தற்போது சாலிகிராமத்தில் படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீயை அணைக்க 2 தீயணைப்பு வாகனம், ஒரு மெட்ரோ வண்டி துணையோடு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீ விபத்து ஏற்பட  காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.