பிங்கர் பிரிண்ட் வைத்தால் தான் வாட்ஸ்அப் ஓபன் செய்ய முடியும்..! அதிக சீக்ரெட் வைத்திருப்பவர்கள் மாட்டிக்காம இருக்க சூப்பர் சான்ஸ்..! 

வாட்ஸ் அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது. அதன்படி பயனாளர்கள் அதிக அளவில் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறது.

அதனடிப்படையில் முன்னதாக ஐஓஎஸ் போன்களில் மட்டுமே பாதுகாப்பு அம்சம் கொண்டு வந்தது. அதாவது பிங்கர் பிரிண்ட் ஆதண்டிகேஷன் வசதியை கொண்டு வந்து இருந்தது. இந்த நிலையில் ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த வசதியைப்  தற்போது கொண்டு வந்து உள்ளது

இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், "ஆண்ட்ராய்டு பயனர்களும் இனி வாட்ஸ் அப் செயலியை பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் பிங்கர் பிரிண்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது. இதற்கு நாம் செய்ய வேண்டியது வாட்ஸப் புதிய வெர்ஷன் ஐ டவுன்லோட் செய்து அதன் மூலம் இந்த வசதியை பெற முடியும்.

அதில் செட்டிங்ஸ் கிளிக் செய்து, அக்கௌன்ட் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். அப்போது காண்பிக்கும் பிரைவேசி என்பதை கிளிக் செய்து அதில் காண்பிக்கப்படும் பிங்கர் பிரிண்ட் லாக் என்பதனை தேர்வு செய்யவேண்டும். அதில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் போது உடனடியாக க்ளோஸ் செய்வது அல்லது ஒரு நிமிடத்திற்கு பிறகு கிளோஸ் செய்வது அல்லது அரை மணி நேரத்திற்கு பிறகு க்ளோஸ் செய்வது என மூன்று விதமாக ஆப்ஷன்ஸ் உண்டு.

இதில் எது தேவையோ அதனை நீங்கள் கிளிக் செய்து பாதுகாப்பாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும் என்பதனை தெரிந்து கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் இந்த ஆப்ஷனை தெரிந்துகொள்ளலாம்.

இந்த வசதி முன்னரே ஐஓஎஸ் போன்களில் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் இதனை கொண்டுவந்துள்ளனர். தேவைப்படுபவர்கள் இதனை  பயன்படுத்திக்கொள்ளலாம்.