film producer kishan doing the business through actress and arrested in us

தமிழ் தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் பாலியல் தொழில் நடத்தி வந்த இந்திய தொழில் அதிபரை கைது செய்து உள்ளது அமெரிக்க போலிஸ்

இந்த தகவல் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதிக பிரபலம் அடையாத தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார் இந்திய தொழில் அதிபரான மொடுகு முடிகிஷான். இவருடைய இந்த தொழிலுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் அவருடைய மனைவி. கிஷான் சில படங்களுக்கு இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கலை நீகழ்ச்சி என்ற பெயரில், அமெரிக்காவுக்கு வரும் தென்னிந்திய நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளதாக தெரிகிறது.

இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த ஒரு நடிகை பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானதால், போலீசில் புகார் அளித்துள்ளார்

அதன் பேரில், சோதனை நடத்தியதில்,ஒரு நடிகைக்கு சுமார் 3000 அமெரிக்க டாலர் வரை இவர் பணம் பெற்று உள்ளார். அமெரிகாவில் உள்ள இந்தியர்கள் தான் இவருடைய ரெகுலர் கஸ்டமர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் தொல்லை தொடர்பாக நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் தான் கிஷானை விசாரணை செய்து கைது செய்து உள்ளதாக அமெரிக்க போலீசார் தெரிவித்து உள்ளனர்

இவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபணம் செய்தால், கணவன் மற்றும் மனைவிக்கு அதிக தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது