மாறி வரும் வாழ்க்கை முறை,உணவு பழக்க வழக்கத்தில் ஏற்பட்டு உள்ள மாற்றம், போதுமான அளவு ஓய்வு இல்லாதது என பல விஷயங்கள் இன்று தாம்பத்ய உறவில் கூட ஈடுபட முடியாத அளவிற்கு மன அழுத்தத்தை கொடுக்கிறது. 

இதனை சரி செய்யவும், ஆண்மையை அதிகரித்து, தாம்பத்ய வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தவும் ஒரு சில பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

அதன் படி, 

வெந்தயம் 

இதில் ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உள்ளதால் ஆண்மை அதிகரிக்க வழிவகை செய்கிறது. 

ஏலக்காய் 

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் ஏலக்காய் எங்கெல்லாம் சேர்த்து சமைக்க முடியுமோ அங்கெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம். ஏலக்காயை எடுத்துக் கொள்வதால், எப்போதும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க வழிவகை செய்யும். இதன்மூலம் தாம்பத்யத்தில் ஈடுபாடு அதிகரிக்க செய்ய முடியும்.

அடுத்ததாக கிராம்பு, பொதுவாக நம் உடலில் அதிக வெப்பத்தை உண்டு பண்ணக்கூடியவை. நம் உடலில் வெப்பம் அதிகரிக்கும் பொழுது ரத்த ஓட்டம் சீராக இருக்கும். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் தாம்பத்ய ஈடுபாடு அதிகமாக இருக்கும்

சீரகம் 

சீரகத்தில் ஈஸ்ட்ரோஜன் இருக்கின்றது.இந்த ஈஸ்ட்ரோஜன் ஆண்களின் தாம்பத்திய உறவின் போது விறைப்புத்தன்மைக்கு கேடுவிளைவிக்கும். இதனால் இதனை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

குங்குமப்பூ

குங்குமப்பூவில் பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க் போன்றவை இருப்பதால் இது தாம்பத்திய உறவிற்கு ஆசையை தூண்டும் வண்ணம் இருக்கும்.

ஜாதிக்காய் 

தாம்பத்ய உறவில் அதிக ஈடுபாடு ஏற்படுவதற்கு வயாகரா எப்படி பயன்படுகிறதோ அதற்கு இணையாக சக்தி கொண்டது இந்த ஜாதிக்காய். இதனை எடுத்துக்கொள்வதன் மூலம் தாம்பத்திய வாழ்க்கை சிறக்கும்.

பூண்டு மற்றும் பச்சை மிளகாய் 

இவை இரண்டையும் சேர்த்து உணவில் சேர்த்து சாப்பிடும் போது தாம்பத்திய உறவு நீண்டநேரம் இருக்க வழிவகை செய்கிறது.

அதேபோன்று இஞ்சி மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளலாம். பாலுடன் இஞ்சி சேர்த்து எடுத்துக் கொண்டாலும் தாம்பத்திய உறவில் அதிக ஈடுபாடு இருக்க வழிவகை செய்யும். மேற்குறிப்பிட்ட உள்ள சில டிப்ஸ் நீங்க  நடைமுறைபடுத்தினால், கண்டிப்பாக  நல்ல உடல் ஆரோக்கியத்துடன் தாம்பத்ய உறவிலும் சிறப்பாக செயல்படலாம்.