fear and anger increase your sweat level
மனித மூளை இன்னும் அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது. மூளையைப் பற்றிய பல உண்மைகளை அறிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அதன் செயல்பாடுகள் ஓரளவுக்கு கண்டறியப்பட்டுள்ளன.
பொதுவாக உடலில் உஷ்ணம் தோன்றும் போது, மூளையின் ஹைபோதலாமஸ் பகுதி நமது தோலைக் குளிர்விக்க வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டிவிடுகின்றன எனவே வியர்வை சுரக்கிறது.

உடல் ரீதியான கரனாங்களைத் தவிர்த்து, நமது உணர்வுகளை மூளையின் ஹைபோதலாமஸ் பகுதி உணர்ச்சி நரம்புகள் மூலமாக வெளிப்படுத்துகின்றன. இந்நரம்பு மண்டலத்தை சிம்பதடிக் நேர்வேஸ் சிஸ்டம் என்று அழைப்பர். நமக்கு கோபமோ, பயமோ, வெறுப்போ தோன்றும் போது இந்த உணர்ச்சி நரம்புகள் தூண்டிவிடுபடுகின்றன. பொதுவாக அல்லது கோபம் உண்டாகும்போது அந்தச் சூழ்நிலையை எதிர் கொள்ள நமது மூளையை தயாராக்குகிறது. அதனால்தான் நமக்கு படபடப்பு உண்டாகிறது. இதோடு உடல் உஷ்ணமும் அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து அதைத் தொடர்ந்து வியர்வை சுரக்கிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையை நாம் நேரடியாக எதிர் கொள்வதா? அல்லது அவ்விடத்தை விட்டு ஓடுவதா? என்று நம்மைத் தயார் செய்ய மூளையிடும் கட்டளையின் விளைவே இந்த வியர்வை ஆகும்.
