ஷாக்கான ரசிகர்கள்...!  விஜய் படத்தில் விஜய் சேதுபதியின் லுக்..எப்படி இருக்கு பாருங்க.!

விஜய் நடித்து வெளிவர உள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

குறிப்பாக சென்னை டெல்லி உள்ளிட்ட ஷிமோகா உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய நெகட்டிவ் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி அதற்காக தனது கெட்டப்பையே மாற்றி உள்ளார்.

அதன்படி நீண்ட தலைமுடி வைத்து வித்தியாசமாக தோன்றுகிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பொங்கல் முடிந்ததும் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்க உள்ளதாகவும், அதற்காக இப்போதே நீண்ட தலைமுடியுடன் தயாராக இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது.

விஜய் சேதுபதி எப்போதும் இயல்பாக நடிக்கும் திறமை கொண்டவர் என்பதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று "மக்கள் செல்வன் "என பெயர் பெற்றவர். இந்த நிலையில் புதிய கெட்டப்பில் விஜயுடன் நடிக்க உள்ளதால் இப்போதே ஒருவிதமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது