Lord shiva weapon: சிவபெருமானின் காக்கும் ஆயுதங்கள்..அழிக்கும் ஆயுதங்கள்..! சிறப்பான ஆயுதங்கள் என்ன..?
Lord shiva weapon: சிவபெருமானின் நெற்றிக்கண்ணே மாபெரும் ஆயுதம் என்றாலும் முக்கண்ணனிடம் பேரழிவு தரும் ஆயுதங்கள் பல உண்டு. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணே மாபெரும் ஆயுதம் என்றாலும் முக்கண்ணனிடம் பேரழிவு தரும் ஆயுதங்கள் பல உண்டு. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவபெருமானின் பல்வேறு மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன. சிவனை உரு கொண்டும், லிங்க வடிவாயும் வழிபடுவது இந்து மரபு.
உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் சிவபெருமான். மும்மூர்த்திகளில் முதல்வர், அடி முடி காண இயலாத ஓம்காரேஸ்வரர் சிவனின் மகா சிவராத்திரி.
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் முக்கண்ணன். இரு கண்களைத் தவிர, புருவங்களின் மத்தியில் மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண் சிவன் தனது நெற்றிக்கண்ணை திறந்தால், பிரபஞ்சமேபஸ்பமாகிவிடும்.
ஆக்கும் கடவுள் பிரம்மன் என்றும், காக்கும் கடவுள் விஷ்ணு என்றும், அழிக்கும் கடவுள் சிவன் என்றும் இந்து மரபில் நம்பப்படுகிறது. எனவே, அழிக்கும் தொழிலை செய்யும் சிவபெருமானிடம் பல ஆயுதங்கள் உண்டு.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணே மாபெரும் ஆயுதம் என்றாலும் முக்கண்ணனிடம் பேரழிவு தரும் ஆயுதங்கள் பல உண்டு. இந்த ஆயுதங்கள் அனைத்தும் உலகையே அழிக்கக் கூடியவை. காலனாய் உருவெடுக்கும் மகாதேவனின் இந்த ஆயுதங்கள் பற்றி மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிவபெருமானின் சிறப்பான ஆயுதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
திரிசூலம்:
திரி என்றால் மூன்று என பொருள்படும். மூன்று கூர்முனைகளை உடைய ஆயுதம் திரிசூலமாகும். சிவனின் திரிசூலம் அவரது வடிவத்துடன் தொடர்புடையது. திரிசூலதாரி என்ற பெயர் பெற்ற சிவபெருமான் பல அசுரர்களைக் கொன்றார். இலங்கையின் அரசன் ராவணனின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு பரிசாக திரிசூலத்தைக் கொடுத்தான்.
ராமனின் கைகளால் ராவணன் இறந்த பிறகு, திரிசூலம் சிவனிடமே சென்று சேர்ந்தது. திரிசூலம் என்பது, உடல், பொருள், உயிர் ஆகிய மூன்று வகையான துன்பங்களின் அழிவைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது. சத், ரஜ, தம என மூன்று வகை குணங்களைக் கொண்டது திரிசூலம்.
சக்கரம்:
விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை உருவாக்கியவர் சிவபெருமான் தான். சுதர்சன சக்கரத்தை சிவபெருமான் விஷ்ணுவுக்கு கொடுத்துவிட்டார். அன்னை பார்வதிக்கு ஒருமுறை சுதர்சன சக்கரம் தேவைப்பட்ட போது, தனது சகோதரி உமையாளுக்கு அதைக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அன்னை பார்வதி, அதை பரசுராமரிடம் கொடுத்தார், அது, அவரிடமிருந்து கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தது. சுதர்சனம், விஷ்ணுவின் சக்கரமாக கருதப்பட்டால், சிவபெருமானுக்கும் ஒரு சக்கரம் உண்டு. அதன் பெயர் பாவரேந்து.
பிநாகம் மற்றும் சிவ தனுசு ஆகிய இரண்டுமே சிவபெருமானுடைய இரண்டு வில்கள் ஆகும். இரண்டுமே பேரழிவு தருபவை.கடவுள்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மா இந்த இரண்டையும் உருவாக்கினார்.சிவபெருமான் பிநாக வில்லால் திரிபுரங்களை அழித்தார். அதனால் தான் திரிபுராரி என்று பெயர் பெற்றார் சிவபெருமான்.
சிவபெருமான் சிவதனுசை, தனது உயர்ந்த பக்தரான மன்னன் தேவரதரிடம் ஒப்படைத்தார். அவர் ஜனக மன்னரின் மூதாதையர். இந்த வில் சீதா தேவியின் சுயம்வரத்தில் பகவான் ஸ்ரீ ராமரின் கைகளால் முறிக்கப்பட்டது. பிநாக வில்லை,கம்ச வதத்தின் போது உடைத்தார்.
இவற்றைத் தவிர, சிவனிடம் கட்வங்கம் என்ற காபாலிக ஆயுதமமும், கோடாரி போன்ற அமைப்பினை உடைய மழு மற்றும் சந்திரஹாசம் என்ற வாளும் உண்டு.