Asianet News TamilAsianet News Tamil

"என் குழந்தைக்கு என்னோட மாமியார் தாய்ப்பால் கொடுக்குறாங்க" புலம்பும் இளம்பெண்.. நடந்தது என்ன?

தனக்கு பிறந்த குழந்தைக்கு மாமியார் தாய்ப்பால் கொடுத்ததால் அதிருப்தியும் அதிர்ச்சியுமான பெண்ணின் பகிர்வை இங்கு பார்க்கலாம். 
 

expert opinion on daughter in law doubts about mother in law breastfeeding her newborn in tamil mks
Author
First Published Jun 21, 2024, 9:30 PM IST | Last Updated Jul 5, 2024, 9:22 PM IST

தனக்கு பிறந்த குழந்தைக்கு மாமியார் தாய்ப்பால் கொடுத்ததால் அதிருப்தியும் அதிர்ச்சியுமான பெண்ணின் பகிர்வை இங்கு பார்க்கலாம். 

"நான் குளிக்க சென்ற சமயம் என் ​​ குழந்தைக்கு என் மாமியார் தாய்ப்பால் கொடுத்தார். இதை கண்டபோது எனக்கு தூக்கி வாரிபோட்டது. நான்  அதிர்ச்சியடைந்தேன். நான் கேட்டதற்கு என் குழந்தை அழுததால் கொடுத்ததாக அவர் கூறினார். குழந்தையை ஆற்றுப்படுத்த பால் கொடுத்ததாகவும் சொன்னார்.  இதை என் கணவரிடம் சொன்னேன். அவர் கண்டு கொள்ளாமல் இருக்க சொல்கிறார்.  இது மறுபடியும் நிகழக் கூடாது. நான் என்ன செய்ய வேண்டும்?" எனக் கேட்டுள்ளார். 

expert opinion on daughter in law doubts about mother in law breastfeeding her newborn in tamil mks

இதையும் படிங்க:  நிர்வாணமாக தூங்க அடம்பிடிக்கும் கணவன்.. அதுக்கு வேலைக்கார பெண் சொன்ன விஷயம்.. குமுறும் பெண்

இதற்கு விடை காண மனநல ஆலோசகரை அணுகினோம். அவர் கூறியதாவது;"இந்தக் கேள்வியே கடினமானது தான். இதற்கு எளிய பதில் இல்லை. சில தம்பதிகள் தங்களின் பிரச்சினையை வெளிப்படையாக விவாதிப்பார்கள். சிலர் அப்படி அணுகமாட்டார்கள். நீங்கள் மாமியாரிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். 

expert opinion on daughter in law doubts about mother in law breastfeeding her newborn in tamil mks

இந்த விவகாரம் குறித்து உங்கள் மாமியாருடன் விவாதிக்கும்போது மரியாதையுடன் பேசுவது முக்கியம். அவரை இந்த விஷயத்தில் குற்றஞ்சாட்ட வேண்டாம். அவர்களுக்கு தவறான நோக்கமோ, எண்ணமோ இல்லை என்பது நீங்கள் சொல்வதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அதனால் இருவருக்குமான உரையாடலை நேர்மறையாகவே மேற்கொள்ளுங்கள். இது குறித்த உங்கள் வருத்தத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்லுங்கள். 

இதையும் படிங்க: 'கணவர் என் உள்ளாடைகளை அணிகிறார்'- அதை பார்த்தாலே... புலம்பும் பெண்.. எதனால் தெரியுமா?  

நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள் என்பதை சொல்ல குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளை சொல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.  அதே சமயம் அவர்கள் ஏன் அதை செய்தர்கள் என்ற நியாயமான காரணத்தையும் புரிந்து கொள்ள முயலுங்கள். உங்களுக்கு இடையே  தலைமுறை இடைவெளி இருப்பதும் காரணங்கள் இருக்கலாம். இருவருக்கும் பொதுவான முடிவை எடுத்து பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios