தமிழகத்தில் இடியுடன் கனமழை..! 

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு உள்மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்குள் நெல்லை தேனி விருதுநகர் கிருஷ்ணகிரி கோவை திருப்பூர் நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பம் நிலவக்கூடிய மாவட்டங்கள்:

வேலூர் சேலம் மதுரை திருச்சி திருவள்ளூர் நாமக்கல் பெரம்பலூர் தர்மபுரி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்ப நிலையாக வேலூர் திருச்சி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 105 டிகிரி வரை அதிகரிக்கலாம் என்றும், அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.