Asianet News TamilAsianet News Tamil

2020 புத்தாண்டு கொண்டாட்டம்..! தயார் நிலையில் 108 அம்புலன்ஸ்..!

சென்னை சிட்டியை பொருத்தவரையில், புத்தாண்டு என்றாலே குடும்பம் குடும்பமாக பொது இடங்களுக்கு சென்று புத்தாண்டை வரவேற்பதும், குறிப்பாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் திரளாக திரண்டு புத்தாண்டை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி தெரிவிப்பார்கள்.

expects new yearcelebration
Author
Chennai, First Published Dec 30, 2019, 7:43 PM IST

புத்தாண்டு கொண்டாட்டம்  தயார் நிலையில் 108 அம்புலன்ஸ்..!  

நாளை இரவு 2020 புத்தாண்டு பிறக்க உள்ளதால் பொதுமக்கள் இப்போது பெரும் மகிழ்ச்சியில் வரவேற்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து ஏற்படும் இடங்களாக  கணிக்கப்படும் 50 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். 

சென்னை சிட்டியை பொருத்தவரையில், புத்தாண்டு என்றாலே குடும்பம் குடும்பமாக பொது இடங்களுக்கு சென்று புத்தாண்டை வரவேற்பதும், குறிப்பாக சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் திரளாக திரண்டு புத்தாண்டை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி தெரிவிப்பார்கள்.

expects new yearcelebration

அப்போது பலூன்களை பறக்கவிட்டு ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி புத்தாண்டு நல்வாழ்த்துகள் சொல்வது வழக்கமாக இருக்கின்றது. இந்த ஒரு தருணத்தில் குடித்துவிட்டு இளைஞர்கள் பலர் வாகனம் ஓட்டுவதும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பைக் ரேஸில் ஈடுபடுவது ஆண்டுதோறும் நடக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. எவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதனையும் மீறி பைக் ரேஸில் ஈடுபடுவது பார்க்க முடிகிறது.

expects new yearcelebration

இதனை தடுக்கும் பொருட்டு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல மிகவும் ஏதுவாக சென்னை மெட்ரோ ரயில் நாளை இரவு 11 மணி முதல் விடியற்காலை ஒரு மணி வரை இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் மிகவும் பாதுகாப்பாக மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம். புத்தாண்டை மகிழ்ச்சையாக வரவேற்கலாம். இந்த நிலையில் விபத்து ஏற்படும் இடங்களாக  கணிக்கப்படும் 50 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios