இன்று கனமழை..! இடியுடன் பலத்த மழை பெய்யக்கூடிய 8 மாட்டங்கள் !
மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, தேனி, நெல்லை, நீலகிரி, விருதுநகர், மதுரை, குமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இன்று கனமழை..! இடியுடன் பலத்த மழை பெய்யக்கூடிய 8 மாட்டங்கள் !
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்த வெப்பநிலைக்கு நடுவே தமிழக மக்களை குளிர்விக்க சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது. கடந்த 2 நாட்களில் 13 மாவட்டங்கள் ஓரளவிற்கு மழை பெற்றது
அதிக வெயில் காரணமாக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெரியவர்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மேலும் வெயில் காரணமாக வீட்டிற்குள்ளேயே புழுக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மழை ஜில்லென்று வீசும் காற்றையும், மழை சாரலிலும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ஒரு நிலையில் இந்த ஒரு நிலையில் குமரி கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, தேனி, நெல்லை, நீலகிரி, விருதுநகர், மதுரை, குமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை
சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.