இன்று மழை வருமாம்..!  வானிலை ஆய்வு மையம் தகவல்..! 

தென் தமிழக மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளதால், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், புதுவை மற்றும் வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால், அதிகபட்ச வெப்ப நிலையாக 31 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உதகையில் 6.9 டிகிரி செல்சியஸ் பதிவாக வாய்ப்பு உள்ளது

கடந்த இரண்டு நாட்களாகவே, சென்னையில் அவ்வப்போது வெயிலும் திடீரென வானம் மேக மூட்டத்துடனும் காணப்பட்டு வருகிறது. அதே வேளையில் காலை நேரத்தில் அதிக பனியும் உள்ளது.