தமிழகத்தில் 4 மாவட்ட்டத்தில் இடியுடன் கூடிய மழை..! வந்தாச்சு அறிவிப்பு..! 

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம் மாவட்டத்தில் நாளை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உள்ளதால், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் விளைவாக, புதுவை மற்றும் வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் எனவும், சென்னையில் அவ்வப்போது வெயிலும் திடீரென வானம் மேக மூட்டத்துடனும் காணப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


கோடை காலம் தொடங்கிய இந்த நிலையில், தமிழகத்தில் மழைக்கான  வாய்ப்பு என்ற செய்தி சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இருந்த  போதிலும் தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம் மாவட்டத்தில் மட்டும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு உள்ளது என்ற செய்தி அப்பகுதி மக்களிடையே மகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.