Asianet News TamilAsianet News Tamil

அப்படி போடு...! வந்தது 5G  “ ஜியோவிற்கு எதிராக ”நோக்கியா-பிஎஸ்என்எல் ஒப்பந்தம்”

expecting 5 g services soon bsnl joined with nokia
expecting 5-g-services-soon-bsnl-joined-with-nokia
Author
First Published Mar 1, 2017, 5:38 PM IST


அப்படி போடு...! வந்தது 5G   ஜியோவிற்கு எதிராக ”நோக்கியா-பிஎஸ்என்எல் ஒப்பந்தம்”

இன்டர்நெட் பயன்பாட்டில்  மிக அதிக வேகமான  சேவையை  வழங்குவது 4ஜி  என்பது நமக்கு  தெரியும் . இதுவரை 4 ஜி வஸ்ரை மட்டுமே  பயன்படுத்தி வந்த நாம் , இனி  5 ஜி பயன்படுத்தும் நேரம் வந்து விட்டது.

இன்னமும், மெதுவான வேகத்தில் செயல்படும் 2 ஜி சேவை கூட நடைமுறையில் உள்ள போது, தற்போது 4ஜி க்கு அடுத்தபடியாக  5 ஜி  வர  உள்ளது. இதற்காக , நோக்கியா-பிஎஸ்என்எல் ஒப்பந்தம்” செய்துள்ளது.

முக்கிய காரணம் ?

தொடர்ந்து தொழில் நுட்பம் வளர  வளர , ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் ஏற்பட்டுதான்  வருகிறது. இதன்  தொடர்ச்சியாக  அதி வேக  இன்டர்நெட் சேவையை பெற  வழிவகை  செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது பிஎஸ்என்எல் மற்றும் நோக்கியா  நிறுவனம்.அதற்கான ஒப்பந்தமும் இன்று  போடப்பட்டது.

எப்படி செயலாற்ற உள்ளது  ?

நோக்கியாவுடன் இணைந்து 5G தொழில்நுட்பம், இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்க பிஎஸ்என்எல் முடிவு  செய்தது .அதனை தொடர்ந்து இரு  நிறுவனங்களிடையே ஒப்பந்தம் இன்று   கையெழுத்தாக உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

புதிய செயலிகள்

5ஜி சேவையில், மிக விரைவாக இயக்கபுதிய புதிய செயலிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஏற்கனவே ஜியோவின் இலவச சலுகையால் மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள்,  சரிவை  கண்டு வரும் நிலையில் , ஜியோவுடனான போட்டியை சமாளிக்கவும் தற்போது 5ஜி களத்தில் இறங்கியுள்ளது     பிஎஸ்என்எல்  நிறுவனம்  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios