தமிழகத்தில் கொட்டப்போகும் பயங்கர மழை..! அடித்து கூறும் பாலச்சந்திரன்..! 

தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து மழை வர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வுய் மையம் தெரிவித்து உள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர்..! 

கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை மழை வலுவாக அவரை வாய்ப்பு உள்ளது என்றும்,தமிழகத்தில் நிலவி வந்த வளி மண்டலத்தின் கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து இன்றும் நடைபெறுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும், கனமழை பொறுத்தவரையில் வேலூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை காண வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து  உள்ளார்.

மேலும், "கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு படி அதிகபட்சமாக திருபுவனத்தில் 9 செ.மீ மழையும், ஆரணி,திருப்பத்தூரில் 8 சென்டி மீட்டர் மழையும், உத்தரமேரூரில் 7 செ.மீ  மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரையில் ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், தென்மேற்கு பருவமழை மூலம், தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையளவு 89 மில்லி மீட்டர்.

இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 117 மில்லிமீட்டர் என இருக்க வேண்டும். இது இயல்பைவிட 24 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்து உள்ளார்.