every day eat ice briyani

இன்று நமது உணவு முறைகள் மாறி விட்டன. நமது முன்னோர் சாப்பிட்ட பழைய சோறு, வெங்காயம் காம்பினேஷன்தான் இன்றளவும் அவர்களை திடகாத்திரமாக வைத்திருக்கிறது. துரித உணவு சாப்பிட்டு வரும் இன்றைய இப்போதைய தலைமுறை, 30வயதிலேயே சர்க்கரை, இதய நோய்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, பழைய சோறு சாப்பிடுவதை இனி வழக்கமாக்கிக் கொண்டால் ஆரோக்கியம் நம்மை தேடி வரும். பழைய சோறு என்றால் கேவலமாக நினைக்கும் நாம், அதிலுள்ள நன்மைகள் குறித்து அறிந்து 
கொண்டால், நிச்சயம் அதை தவிர்க்க மாட்டோம்.


பழைய சோற்றில் தான், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கணக்கிலடங்கா இருக்கின்ற. இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காலை உணவாக பழைய சாதத்தை உண்டால், உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.