பூந்தொட்டியிலேயே வளர்க்கலாம் வெந்தய கீரை..! நாமும் முயற்சிக்கலாமே..! 

அனைத்து விதமான ஊட்டத்சத்து நிறைந்தது கீரை வகைகள். கீரை என்றாலே கிராமத்தில் முருங்கை கீரையம், சிறு கீரை, அரை கீரை, வெந்தய கீரை என நினைவுக்கு வரும் அல்லவா..?

ஆனால் சிட்டி லைஃப்ல இருக்குறவங்க, நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதில்லை என்றே கூறலாம். அதற்கு காரணம் மாறி வரும் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை என்றே கூறலாம். இருந்த போதிலும் ஒரு சில வீட்டில் உள்ள பெரியவர்கள் இன்றளவும் சத்தான கீரையை தேடி தேடி வாங்குவார்கள்...

இதெல்லாம் ஒரு பக்க இருக்க, இன்னொரு பக்கம் சிட்டியில் வாழக்கூடியவர்கள் கூட, இயற்கையான முறையில் சிறிய தோட்டத்தை வீட்டிலேயே வைக்க ஆசைப்படுகிறார்கள். அதுல ஒரு விஷயம் தான், பூந்தொட்டியில் கீரை வளர்க்கும் முறை.

கீழே உள்ள இந்த படத்தை பாருங்கள்.. எவ்வளவு அழகாக வீட்டு பூந்தொட்டியிலேயே வெந்தய கீரையை வளர்த்து, ஆரோக்கியமாக உணவருந்த விரும்புகிறார்கள் என்று...

இவர்களை போன்றே நாமும் இது போன்று, நம் வீட்டிலேயே கீரை வகைகளை எளிதாக வளர வைத்து, உண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

வெந்தய கீரையின் பயன்கள் :

வெந்தய கீரையானது, கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து நீக்குகிறது. சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும், இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னை வராமல் தடுக்கும்.