ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு..! சம்பளம் ரூ . 2800 ! போட்டி போடுவதோ என்ஜினியர்ஸ் வேலூரில் வியப்பு..!

வேலூர் மாநகரில் ஊர்க்காவல் படையில் சேர்வதற்காக பொறியியல் படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் கூட விண்ணப்பித்துள்ளனர்.

வெறும் 5 நாட்கள் வேலை உடன் கூடிய 2800 ரூபாய் சம்பளத்திற்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதில் 800 பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காலியாக உள்ள பணியிடங்களை வெறும் 51 மட்டுமே. இதற்கான விண்ணப்பத்தை கடந்த 7 மற்றும் 8 ஆம் தேதியில் வழங்கப்பட்டது.

இந்த பணியில் சேர்வதற்காக வயதுவரம்பு 18 முதல் 50 வரையிலும் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த முறை தேர்வு செய்த போது, 200 பேர் தேவைப்பட்டனர். அப்போதைய நேரத்தில் இதற்காக 500 பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தமுறை வெறும் 51 பணியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொறியாளர்கள் மட்டுமின்றி இளங்கலை முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த வேலையை பெறுவதற்காக விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.