ஊழியர்களுக்கு "முழு சம்பளம்" உண்டு...! பிரபல நிறுவனம் அறிவிப்பு..! மற்ற நிறுவனங்களும் அறிவிக்குமா..?

கொரோனா எதிரொலியால் நாடே ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. இந்த ஒரு தருணத்தில்  அடுத்து வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என நேற்று முன்தினம் 24 ஆம்  தேதி பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

இந்த ஒரு நிலையில் இன்று 2 ஆவது நாளாக ஊரடங்கு உத்தரவை  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்கும் தருணத்தில் பொருளாதார ரீதியாக அடுத்து என்ன செய்ய போகிறோம் என மக்கள்  சிந்திக்க தொடங்கி உள்ளனர் 

ஒரு பக்கம் உயிர் பயம் .. மற்றொரு பக்கம் வாழ்வாதாரம் பிரச்சனை... எனவே அரசும் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத முறையில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை சிரமம்  இன்றி கிடைக்க வழிவகை செய்ய திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. 

ஊரடங்கு உத்தரவு இருப்பதால், ஊழியர்களுக்கு எந்த வகையிலும் பாதிக்காதவாறு சம்பளத்தை கொடுக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு பிரதமர் மோடியும் தெரிவித்து உள்ளார். இந்த ஒரு நிலையில் பஜாஜ் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் தெரிவித்துள்ளார். இதனால் பஜாஜ்  ஊழியர்களுக்கு நல்லதொரு செய்தியாக அமைந்து உள்ளது 

இதெல்லாம் தாண்டி தன்னுடைய சம்பளம் கூட தேவைப்பட்டால் கொடுக்க ரெடி என்றும், இந்த சமூக ஊரடங்கு காரணமாக ஒரு ஊழியர் கூட பணியிலிருந்து நீக்கப்பட மாட்டார் என்றும் குறிப்பிட்டு உள்ளார் அவர்.

இந்த நிலையில் மற்ற நிறுவ ஊழியர்களும் இது போன்ற நல்ல செய்தியை தாம் வேலை செய்யும் நிறுவனமும்  முன்வந்து தெரிவிக்காதா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் இவரின் இந்த துணிச்சலான அறிவிப்பும்  மக்களின்  தேவைகளையும் புரிந்துகொண்ட தலைமை என்ற முறையில் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை  குவித்து வருகின்றனர். எனவே இந்த ஒரு செய்தி மற்ற அனைத்து நிறுவனத்திற்கும் உதாரணமாக இருக்கும் என மக்கள் கருதுகின்றனர்