Asianet News TamilAsianet News Tamil

ஹைப்ரிட் வொர்க் புரட்சியை ஏற்றுக்கொள்ளுதல் : உத்திகள், கருவிகள் மற்றும் எதிர்காலப் போக்குகள்!

அதிகரித்து வரும் ஹைப்ரிட் வொர்க் மாடலின் போக்கு, கல்வி மற்றும் கேமிங் துறையில் தற்போது நிலவி வரும் உதாரணங்கள், இந்த போக்கின் முக்கிய உத்திகள், மென்பொருளை  செயல்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் ஹைப்ரிட் பணி மாதிரி மிகப்பெரிய புரட்சியை வடிவமைக்கும் எதிர்கால போக்குகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.

Embracing the Hybrid Work Revolution: Strategies, Tools, and Future Trends
Author
First Published Jun 5, 2023, 5:07 PM IST

இன்றைய வணிக சூழலில் ஹைப்ரிட் அலுவலக மாடல்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வது மற்றும் வீட்டில் அல்லது விரும்பும் இடத்தில் இருந்து வேலை செய்வது என்று சௌகரியமான தேர்வை ஹைப்ரிட் மாடல் வழங்கியுள்ளது! உற்பத்தித் திறன் மேம்படுத்துதல், வொர்க்-லைப் பேலன்சை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை நிறைவேற்றும் நோக்கத்தோடு, அதி வேகமாக மாறி வரும் இந்த அணுகுமுறைக்கு ஏற்றவாறு வணிக நிறுவனங்களும் தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றன. இந்த கட்டுரையில், அதிகரித்து வரும் ஹைப்ரிட் வொர்க் மாடலின் போக்கு, கல்வி மற்றும் கேமிங் துறையில் தற்போது நிலவி வரும் உதாரணங்கள், இந்த போக்கின் முக்கிய உத்திகள், மென்பொருளை  செயல்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் ஹைப்ரிட் பணி மாதிரி மிகப்பெரிய புரட்சியை வடிவமைக்கும் எதிர்கால போக்குகள் ஆகியவற்றைப் பார்க்கலாம். 

நிஜ வாழ்க்கை உதாரணங்கள்: கல்வித்துறை

ஹைபிரிட் வொர்க் மாடல்களின் நோக்கி நகர வேண்டும் என்ற முனைப்புடன் கல்வித்துறை குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஆன்லைனில் கற்பித்தல், மற்றும் பல முறைகளை சேர்த்து கற்பிக்கும் அணுகுமுறைகள், என்று கல்வி நிலையங்கள் மாற்றல் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. விர்ச்சுவல் வகுப்பறைகள், ஆன்லைன் வளங்கள் மற்றும் அவ்வபோது நேருக்கு-நேர் சந்திக்கும் அமர்வுகள் என்று அனைத்தையும் சீராக ஒருங்கிணைத்து, செயல்படும், Vendatu நிறுவனத்தை இதற்கு மிக முக்கிய எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த ஹைப்ரிட் அணுகுமுறை, மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரித்திருப்பதோடு மட்டுமில்லாமல், பிரத்யேகமான கற்கும் வாய்ப்புகளையும் வழங்கியிருக்கிறது. 

நிஜ வாழ்க்கை உதாரணங்கள்: ஐகேமிங் துறை (iGaming)

ஹைப்ரிட் மாடல்களை உடனடியாக ஏற்றுக் கொண்டு, செயல்படுத்திய முன்னோடியாக ஐகேமிங் துறை திகழ்கிறது. Onlinecasinoguide போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான ரிமோட் வேலை மற்றும் சௌகரியமான பணிச்சூழல் ஏற்பாடுகள் ஆகியவற்றை சிறப்பாக அமல்படுத்தி இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மேம்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் திட்டங்களை நிர்வகிக்கும் கருவிகளின் உதவியோடு இதை சாத்தியமாக்கி இருக்கின்றன. ஊழியர்கள், குழுவினர் என்று எல்லாரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பணியாற்றினாலும், அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு விருந்து, ஒரு ஒருங்கிணைந்த சூழலை உருவாக்கியது, குழுக்களின் உற்பத்தித்திறனையும் அதிகரித்துள்ளது, ஊழியர்களும் திருப்தியுடன் பணிகளைச் செய்கிறார்கள். 

முக்கிய உத்திகள் மற்றும் செயல்படுத்தும் கருவிகள்:

ஒரு ஹைப்ரிட் பணிச்சூழல் என்ற அமைப்பில் முன்னேற, வணிகங்கள் முக்கியமான உத்திகளை பயன்படுத்துகிறது மற்றும் மென்பொருள் தீர்வுகளை செயல்படுத்துகிறது. மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஸ்லாக், ஜூம் உள்ளிட்ட கருவிகளின் வழங்கும் சிறப்பான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு, தொலைவில் இருந்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதை, உரையாடுவதை, கோப்புகளை பகிர்வதை தடையின்றி செயல்படுத்துகிறது. அதே போல, ஆசனா, மற்றும் டிரெல்லோ உள்ளிட்ட திட்ட மேலாண்மை மென்பொருள், கொடுக்கப்பட்ட பணியை திறமையாக நிர்வகிப்பதையும், பணிப்பாய்வு ஒருங்கிணைப்பையும் உறுதி செய்கிறது. கூடுதலாக, நிறுவனங்கள் ஊழியர்களின் வசதிக்கு ஏற்றவாறு திட்டமிடுகிறது, ஆரோக்கியம் / நலன் சார்ந்த செயலிகள் வழங்குவது மற்றும் விர்ச்சுவலாக குழுவை மேம்படுத்தும் செயல்பாடுகளை ஊக்குவிப்பது ஆகியவற்றின் மூலம் ஊழியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒரு நேர்மறையான ஹைப்ரிட் பணிச்சூழலை உருவாக்குகின்றன.

ஹைப்ரிட் பணியை எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்பதற்கான புள்ளிவிவரங்கள்:

இந்தியாவில் ஹைப்ரிட் வொர்க் மாடலை ஏற்றுக்கொள்வது என்பது மிக பெரிய அளவில் வளர்ச்சியை கண்டுள்ளது. சமீபத்தில் BCG நடத்திய ஒரு ஆய்வின் படி 80% இந்திய ஐடி நிறுவனங்கள் மிக விரைவிலேயே ஹைபிரிட் மாடலைத்தான் தேர்வு செய்ய இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கும் ஊழியர்கள் திருப்தியை உறுதி செய்வதற்கும் ஹைபிரிட் மாடல் மிகச் சிறந்த தீர்வாக இருக்கிறது என்பதையே இது வெளிக்காட்டுகிறது. 

எதிர்காலத்தில் எப்படி இருக்கும்:

எதிர்காலத்தில் அலுவலகப் பணி என்றாலே, மறுக்க முடியாத அளவுக்கு ஹைபிரிட் வொர்க் மாடலின் புரட்சி என்பது நிச்சயமாக இணைந்திருக்கும். Vox நடத்திய ஒரு ஆய்வு, 2025 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதிலும் 70% பணியாளர்கள், ஹைப்ரிட் மாடலையோ அல்லது ரிமோட் வேலை ஏற்பாடுகளையோ தான் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கிறது. பணியில் நெகிழ்வுத்தன்மை அதிகரித்துள்ளது எவ்வளவு முக்கியமாகக் கருதப்படுகிறது என்பதையும், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என்று இரண்டு தரப்பினருக்குமே இது அளிக்கும் பலவிதமான நன்மைகளை அங்கீகரிப்பதையும் இது உணர்த்துகிறது. 

அதிகரித்துவரும் போக்குகள்:

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ளுதல்: தொடர்ச்சியாக, ஹைப்ரிட் வொர்க் சூழலுக்கான தளம் உருவாகி வருவதால், வணிக நிறுவனங்கள், வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மூலதனமாக்குகின்றன. ஆக்மென்டட் ரியாலிட்டி(AR) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) கருவிகள், ரிமோட் ஒத்துழைப்பில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தி வருகின்றன. நிஜமாக நடப்பது போலவே மெய்நிகர் சந்திப்புகள் மற்றும் வேலையில் மூழ்கிப் போகும் பணியிடங்களை செயல்படுத்துகின்றன. கூடுதலாக, மேம்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரண்டுமே, செயல்படுத்தக்கூடிய நுண்ணறிவு மற்றும் பணிப்பாய்வை ஒழுங்குபடுத்தும் நுண்ணறிவு ஆகியவற்றை வழங்குவதன் மூலம், ஹைப்ரிட் வொர்க் மாடலை நேர்த்தியாக வடிவமைக்கின்றன. 

ஹைபிரிட் புரட்சியை ஏற்றுக் கொள்வதன் மூலமாகவும், சிறப்பாக செயல்படக்கூடிய உத்திகளை பயன்படுத்தி, மென்பொருள் தீர்வுகளை செயல்படுத்துவது மூலமாகவும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய சவால்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். மற்றும் இந்த அணுகுமுறையின் மூலம் நன்மைகளை பல மடங்கு அதிகரிக்க முடியும். ஏற்கனவே கல்வித்துறை மற்றும் ஐ கேமிங் துறை ஆகிய இரண்டுமே இந்த ஹைப்ரிட் மாடல்களை இம்ப்ளிமென்ட் செய்து, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர். இது மேம்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் ஊழியர்களின் திருப்தி ஆகிய இரண்டையுமே வெளிப்படுத்துகிறது. இந்தியா முழுவதுமே ஹைபிரிட் வேலையை ஏற்றுக்கொள்ளும் தன்மை அதிகரித்து வருவது, எதிர்காலம் டைனமிக் மற்றும் றும் நெகிழ்வு தன்மை நிறைந்த பணிச்சூழலாக அமையும் என்பதற்கு சான்றாக இருக்கிறது. இத்தகைய தளத்தில் ஊழியர்கள் நலன், நல்வாழ்வு மற்றும் நிறுவனத்தின் வெற்றி ஆகிய இரண்டுக்குமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios