உங்கள் ஏரியாவில் மின் தடையா..? 1912 என்ற எண்ணுக்கு கால் பண்ணுங்க போதும்.! அமைச்சர் அதிரடி..!

இடம் பற்றாக்குறை,மின்சார இழப்பு ,மின்தடை உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணும் வகையில் தமிழகம்  முழுவதும் புதிய முறையை அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்து உள்ளார்.

அதன் படி,  மின் தடையாக உடனடியாக  சரி செய்ய மின் தெரிவித்தாலே போதுமானது. உடனடி தீர்வு காண  முடியும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

மின் அழுத்தம் அதிகமாகும் போது மின்மாற்றி பழுதாகி விடுகிறது என இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தத்தொடரில், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி,  நிதி நிலைக்கு ஏற்ப தமிழகம் முழுவதும் ஒற்றை கம்ப மின்மாற்றியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்து உள்ளார்.