நாடாளுமன்ற தேத்தல் நெருங்கி வரும் சமயத்தில் தேர்தல் பரப்புரை  தற்போது சூடு பிடித்து உள்ளது. 

அடுத்து மத்தியில் ஆட்சி அமைக்க போவது காங்கிரஸா..? அல்லது மீண்டும் பாஜக வா..? என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைந்து விட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கு  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி உரிய ஆவணத்தோடு, ரூ.50 ஆயிரம் வரை எடுத்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காசு வாங்காமல் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர கட்சியில் இருந்து எந்த பணத்தையும் எதிர்பார்க்க கூடாது என்பதற்காகவும், சிந்தித்து வாக்கு போட வெண்டும் என்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் சில வரிகளை எழுதி மக்கள் பார்வையில் பாட்டுப்பாடி வைத்துள்ளார். 

அது என்ன என்பதை நீங்களே பாருங்கள்..!