67 வயது மூதாட்டி அந்தரத்தில் தொங்கும் கம்பி மீது அநாயாசமாக சைக்கிள் ஓட்டி அசத்தும் வீடியோ வைரலாகப் பரவுகிறது.

60 வயதைக் கடந்த பாட்டி ஒருவர் கம்பியின் மீது சைக்கிள் ஓட்டி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

முதியவர்கள் வயதை மீறிய செயல்களைச் செய்து அசத்தும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகப் பரவுவது வழக்கம். எத்தனை வயதாக இருந்தாலும் வாழ்க்கையில் புதிய முயற்சியைச் செய்வதற்கு எல்லையே இல்லை. இதையே நிரூபித்திருக்கிறார் 67 வயது மூதாட்டி.

அந்த வீடியோவில் மஞ்சள் நிற சேலை அணிந்த பாட்டி பயமின்றி துணிச்சலுடன் சைக்கிள் ஸ்டண்ட் செய்துகாட்டுகிறார். ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு கியர் அணிந்து, உயரமாகக் கட்டப்பட்ட மெல்லிய கம்பியில் சைக்கிளை எளிதாக ஓட்டிச் செல்கிறார்.

View post on Instagram

Rayyana Barnawi: விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி வீராங்கனை ரயானா பர்ணாவி

பாட்டி அந்தரத்தில் சைக்கிள் ஓட்டும் வீடியோவைப் பார்த்தவர்கள் அவரது துணிச்சலையும் திறமையையும் பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். அநாயாசமாக கம்பி மீது சைக்கள் ஓட்டி சாகசம் புரியும் பாட்டியைப் பாராட்டி கமெண்ட் செய்கிறார்கள். சிலர் பாட்டியின் உடல் உறுதியை எண்ணி வியக்கிறார்கள்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமனில் பகிர்ந்த ஒருவர், “எனக்கு பயமில்லை மகனே, நான் சைக்கிள் ஓட்டுவேன். நீ என்னுடன் வா என்று சொல்லி 67 வயதில் தன் ஆசையை நிறைவேற்ற அந்த அம்மா எங்களிடம் வந்தார். அதை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.

“பாட்டி கொஞ்சம்கூட பயப்படவே இல்லை. சவாலை முடிக்கும் வரை உறுதியாக இருந்தார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

110 வயது பாட்டிக்கு முளைத்த அதிசய பல்.. இது தான் காரணம்.. மருத்துவர் கொடுத்த விளக்கம்