குழந்தைகள் விரும்பி சாப்பிடும் “ முட்டை இட்லி உப்புமா “
உப்புமா என்றாலே பலருக்கு கண்டிப்பாக பிடிக்காதுன்னு தான் சொல்வாங்க. ஆனால் இட்லி உப்புமா என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அது என்ன இட்லி உப்புமா......அப்படினு கண்டிப்பா உங்களுக்கு தோணாது. ஏனென்றால், ஏற்கனவே சூர்ய வம்சம் படத்தில் வரும் ஒரு காட்சி மூலமா , மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட ஒரு ரெசிபி இதுதான்..
.....இந்த உப்புமா பெரியவங்க முதல் சிறு குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் படி தான் இருக்கும்....
இட்லி உப்புமா என்றால் மூக்கை சுளிக்கும் குழந்தைகளை ஈர்க்கும் விதமாக, அதில் முட்டையை கலந்து, முழுக்க முழுக்க ஃபாஸ்ட் ஃபுட் போன்று பரிமாற முடியும். அதைச் செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி – 4
முட்டை – 2
மிளகுப் பொடி - அரை ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ற அளவு.
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இட்லியை நன்றாக உதிர்த்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கறிவேப்பிலை, மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வதக்கிய வெங்காயத்தில் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து முட்டை வேகும் வரை நன்கு கிளறவும்.
முட்டை வெந்தவுடன் உதிர்த்த இட்லியை சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான முட்டை இட்லி உப்புமா ரெடி.....
