எனக்கு தயக்கமா? இல்லவே இல்லை... மீண்டும் நிரூபணம் செய்த எடப்பாடி பழனிசாமி!

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள 14 ஆம் தேதிக்கு முன்னரே மீண்டும்  2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த ஒரு நிலையில்  தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கேள்வி  முன்வைத்து இருந்தார். அதன் படி 

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்கள் ஊரடங்கு  உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அறிவிக்காதது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் இந்த விஷயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தயக்கம் காண்பிப்பது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார்.


இந்த ஒரு நிலையில் பதினான்காம் தேதியான நாளையோடு நாடு முழுக்க ஊரடங்கு முடிவடையும் நிலையில் காலை 10 மணியளவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார். இந்த ஒரு நிலையில் இதற்கு முன்னதாகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஊரடங்கு உத்தரவை நீட்டித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 

அதில் மிக முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்... அதாவது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்போது வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.


கட்டட தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கு 15 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். 


நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில் சரியான நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டபடி, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த ஒரு நிலையில் நாளை காலை 10 மணிக்கு பிரதமர் உரை நிகழ்த்த உள்ளதால், எப்படியும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எப்படியும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.