முழங்கால் வலி, மூட்டு வலி என்பது வயதான பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் தொந்தரவு ஆகும். ஆண்களை விட 50 வயதை கடந்த பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மூட்டு வலியால் அவமதிப்படும் பெண்கள் அதிலிருந்து விடுபட எளிமையான பயிற்சிகள், அவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மூட்டு வலி என்பது பல பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினை ஆகும். குறிப்பாக 50 வயதுக்குப் பிறகு. இது தினசரி செயல்பாடுகள், படி ஏறுதல், நிற்பது போன்றவற்றை மிகவும் கஷ்டமான மற்றும் வலியூட்டும் செயல்களாக மாற்றி விடுகிறது. பெண்களுக்கு மூட்டு வலி மற்றும் புற்றுநோய் எதிர்பார்ப்பின் அபாயம், ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. வயது முதிர்வின் காரணமாக ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தசை வலிமை இழப்பு காரணமாக மூட்டு வலி பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது.

முறையான அணுகுமுறையை பின்பற்றினால் மூட்டு வலியில் இருந்து விடுபட முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். 50 வயதுக்கு மேலான பெண்களுக்கு மூட்டு வலி எதற்காக ஏற்படுகிறது என்பதையும், வலியை குணப்படுத்தும் மற்றும் மூட்டுக்களை வலிமைப்படுத்தும் எளிய, பயனுள்ள குறிப்புகளையும் மற்றும் உடற்பயிற்சிகளையும் தெரிந்து கொள்ளலாம்.

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மூட்டுவலி வர காரணம் :

* மூட்டு வலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொண்டால், பயனுள்ள தீர்வுகளை கண்டுபிடிக்க உதவும். பெண்களுக்கு ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக மூட்டு வலி மற்றும் சோர்வு ஏற்படும் என சொல்லப்படுகிறது. இது வயதாக ஆக பெண்களின் உடல் நிலையில் பாதிப்புக்களை அதிகமாக்கி விடுகிறது. 

* ஈஸ்ட்ரோஜன் குறைவு: வயது மாறுதலின் காரணமாக, பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி அளவில் குறைவு ஏற்பட்டு விடுகிறது. இது மூட்டுகளை பலவீனமாக்கி, அவற்றில் வலியை ஏற்படுத்துவதுடன், சில சமயங்களில் எலும்புகள் சேதத்திற்கும் காரணமாகி விடுகிறது.

தசைகள் வலுவிழப்பு : 

பெண்கள் வயதாகும் போது, அவர்கள் தசை வலிமையை இழக்கின்றனர். குறிப்பாக முன் கால் தசைகள் தளர்வடைந்து விடுகிறது. இது மூட்டு, முழங்கால்களில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தி, கார்டிலேஜ் சேதத்தையும், ஆஸ்டியோஆர்திரிட்டிஸ் என்ற நிலைக்கு அதிகமான அபாயத்தை உண்டாக்கி விடுகிறது.

முழங்கால் வலிக்கு தீர்வு என்ன ?

தசை வலிமை பயிற்சி: 

தசை வலிமையை அதிகப்படுத்துவதால், முழங்கால் வலியை குறைப்பதுடன் மூட்டுகளை பாதுகாக்கவும் முடியும். குவாட்ரிசெப்ஸ் மற்றும் குளூட்ஸ் வலிமை பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

சரியான நடைபயிற்சி முறைகள்: 

நடைபயிற்சி முழங்கால்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆனால் அதை சரியான முறையில் செய்ய வேண்டும். கடினமான தன்மை கொண்ட காலணிகளை தவிர்த்து லேசான, தட்டையான காலணிகளை அணிய வேண்டும். நடக்கும் போது முழங்கால்களில் Knee cap அல்லது knee band அணிந்து கொண்டு நடப்பது மூட்டுக்களின் உராய்வை தடுத்து, வலியை குறைக்கும்.

முழங்கால்களை வலிமைப்படுத்த எளிய உடற்பயிற்சிகள் : 

1. நேராக நின்று, ஆதரவிற்காக ஒரு நாற்காலி அல்லது சுவரை பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு காலை பின்னோக்கி லேசாக தூக்கி, 2 முதல் 3 வினாடிகள் அப்படியே நிறுத்தி, பிறகு மெதுவாக காலை கீழே இறக்கவும். இப்படி ஒவ்வொரு காலிலும் 10-15 முறை செய்ய வேண்டும்.

2. சுவரில் சாய்ந்து நின்று, இரு கால்களையும் உடல் அளவிற்கு விரித்து வைத்துக் கொண்டு, பாதி அளவிற்கு முட்டிகளை மடக்கி, நாற்காலியில் உட்காருவது போல சுவற்றில் சாய்ந்த படியே உட்கார வேண்டும். 10 முதல் 30 விநாடிகள் அப்படியே உட்கார வேண்டும். பிறகு மெதுவாக எழ வேண்டும். இப்படி 3 முதல் 5 முறை செய்ய வேண்டும். 

இந்த உடற்பயிற்சிகள் எவ்வாறு உதவுகின்றன?

இந்த உடற்பயிற்சிகள், முன்கால்கள் சுற்றியுள்ள தசைகளை உறுதியாக்குவதுடன், மூட்டுகளின் மீதான அழுத்தத்தை குறைக்கும். பெரும்பாலான தசைகள் சிறப்பாக இருந்தால், முழங்கால்களிலிருந்து அழுத்தம் குறையும். இது வலியை குறைக்கவும், சேதங்களை குறைக்கவும் உதவுகிறது.
இறுதியாக நடைபயிற்சி என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். ஆனால் அதை சரியான முறையில் செய்ய வேண்டும். அதிக அழுத்தம் இல்லாத சாஃப்டான குதிகளை கொண்ட செருப்புக்களை அணிய வேண்டும். நடக்கும் போது முழங்கால்களை லேசாக தூக்கி நடக்க வேண்டும். இதனால் மூட்டுக்களில் அழுத்தம் ஏற்படாமல் இருக்கும். இதன் காரணமாக மூட்டு வலி குறையும்.