Asianet News TamilAsianet News Tamil

சுகாதாரமற்ற தேநீர் வடிகட்டியை சுத்தம் செய்வது இப்படித்தான்..!!

நீங்கள் தொடர்ந்து தேநீர் போட்டுக்கொண்டே இருந்தால், தேநீர் வடிகட்டியை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருக்க நேரிடும். அதனால் அது சுகாதாரமற்றதாக மற்றும் அழுக்கு நிறைந்ததாக மாறிவிடக்கூடும்.
 

Easy Hacks To Clean Your Tea Strainer
Author
First Published Dec 1, 2022, 2:06 PM IST

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பானங்களில் ஒன்று தேநீர். நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கோ அல்லது காலையைத் தொடங்குவதற்கோ, தேநீர் இல்லாமல் மக்களின் நாள் கழிவதில்லை. தேநீர் தயாரிக்க தேயிலை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது தயாரிக்கப்பட்ட பிறகு வடிகட்டப்படுகிறது. இதற்கு ஒரு வடிகட்டி எப்போதும் தேவைப்படுகிறது. சில வீடுகளில் தொடர்ந்து தேநீர் போட்டுக்கொண்டே இருப்பார்கள், அப்படிப்பட்ட சூழலில் வடிகட்டியை முறையாக சுத்தம் செய்ய முடியாமல் போய்விடும். இதனால் அழுக்கு, தூசி மற்றும் துரும்பு போன்றவற்றை நீக்குவதற்காக பயன்படுத்தப்படும் வடிகட்டி சுகாதாரமற்றதாகிவிடும். அது கருப்பாக மாறி, அதன் துளைகளும் அடைக்கத் தொடங்கும். இதுபோன்ற வடிகட்டியில் இருந்து தேநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், தேநீர் வடிகட்டியை எவ்வாறு சுத்தம் செய்வது என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இதை நீங்கள் பின்பற்றி தேநீர் வடிகட்டியை பளபளப்பாக மாற்றலாம்.

பேக்கிங் சோடா

சமையல் சோடா பல்வேறு சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருள் தான். ஆனால் அது வெவ்வேறு பொருட்களைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. இதை நீங்கள் பயன்படுத்தி ஒரு பொருளை சுத்தம் செய்யும் போது, அது எளிதாக சுத்தமாகிவிடும். ஒரு பாத்திரத்தில் சிறிது வெந்நீரை எடுத்துக் கொள்ளவும். கிண்ணத்தில் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது கறை படிந்த தேநீர் வடிகட்டியை எடுத்து, அந்த தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு, பல் துலக்கும் பிரெஷ் கொண்டு வடிகட்டியை நன்றாக தேய்த்து சுத்தம் செய்யுங்கள். இதனால் வடிகட்டியில் இருக்கும் அழுக்கு சுத்தமாக வந்துவிடும். அதையடுத்து வழக்கம் போல வடிகட்டியில் சோப்பு தேய்த்து, பாத்திரம் கழுவுவது போல சுத்தம் செய்து பயன்படுத்த தொடங்கலாம். 

ஆல்கஹால்

ஆல்கஹாலில் கறை உள்ளிட்ட பிற அழுக்குகளை சுத்தம் செய்வதற்கான அற்புதமான பண்புகள் காணப்படுகின்றன. இதே பண்புகள் வோட்காவிலும் காணப்படுகின்றன. அதில் வாசனையில்லாததால், தாராளமாக அதை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம். மேலும் இது தேயிலை கறையை அகற்ற பெரிதும் உதவும். ஒரு கிண்ணத்தில் வோட்காவை ஊற்றவும். பிறகு, அதே கிண்ணத்தில் நான்கில் மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும். அதன் பிறகு, தேநீர் வடிகட்டியை கரைசலில் வைக்கவும், அதை ஒரே இரவில் மூழ்க வைக்கவும். அதையடுத்து வடிகட்டியை சோப்பு தேய்த்து கழுவி, வழக்கம்போல சுத்தம் செய்து பயன்படுத்த தொடங்கலாம்.

மொபைல் போன் & மைக்ரோவேவ் ஓவன்களை பயன்படுத்துவது புற்றுநோயிக்கு வித்திடுமா..??

அடிதடி க்ளீனிங்

வடிகட்டியை மிகவும் தீவிரமாக சுத்தம் செய்வதன் மூலம், அதிலிருக்கும் கறைகள் மற்றும் சிறிய துகள்களை அகற்றிவிடலாம். ஆனால் இது எல்லாவிதமான வடிகட்டிகளுக்கும் பொருந்தாது. இந்த முறை எஃகு அல்லது பிற உலோகக் கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வடிகட்டிகளுக்கு மட்டுமே. மேலும், பிளாஸ்டிக் ஸ்ட்ரைனர்களை இப்படி சுத்தம் செய்திட முயற்சிக்காதீர்கள். ஒருவேளை, நீங்கள் மறந்தும் முயற்சித்தால் வடிகட்டி உடைந்துபோய்விடும்

தீயில் காட்டி சுத்தம் செய்யலாம்.

குறைந்த தீயில் ஸ்டவ்வை பற்ற வைக்க வேண்டும். உங்கள் தேநீர் வடிகட்டியை எடுத்து 2-3 நிமிடங்கள் தீயில் சூடாக்கவும். அப்போது சமையலறை கையுறைகளை பயன்படுத்தலாம். வடிகட்டிப் பகுதிகள் அனைத்தும் கரி கருப்பாக மாறியவுடன், தீயை அணைக்கவும். ஒரு பழைய பல் துலக்கும் பிரெஷ்ஷை எடுத்து, வடிகட்டியின் மேற்பரப்பில் நன்றாக தேய்க்கவும். இறுதியாக, பாத்திரங்களைக் கழுவும் சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தம் செய்யுங்கள். இதன்மூலம் உங்களுடைய வடிகட்டி புத்துயிர் பெற்றது போல ஜொலிக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios