வெறும் 10 நிமிடத்தில் டேஸ்டான வெஜ் பிரைடு ரைஸ்.. ரெசிபி இதோ!!
Veg Fried Rice Recipe : குழந்தைகளுக்கு பிடித்த வெஜ் பிரைடு ரைஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
பிரைடு ரைஸ் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். இத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு குழந்தை பிரைடு ரைஸ் வேண்டும் என்று அடம்பிடித்து கேட்கும் போது, நீங்கள் ஹோட்டல் வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே செய்து கொடுங்கள். அதுதான் ஆரோக்கியமும் கூட. ஆனால், உங்களுக்கு பிரைடு ரைஸ் எப்படி செய்வது என்று தெரியவில்லையா உங்களுக்கான பதிவு தான் இது.
பொதுவாக பிரைடு ரைஸில் சிக்கன் பிரைடு ரைஸ், பன்னீர் பிரைட் ரைஸ், முட்டை ப்ரைடு ரைஸ், வெஜ் ப்ரைட் ரைஸ் என பல உண்டு. அந்த வகையில் இன்றைய கட்டுரையில், நாம் குழந்தைகளுக்கு பிடித்த வெஜ் பிரைடு ரைஸ் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் டேஸ்டான எக் பிரைடு ரைஸ்.. ஒருமுறை செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க!
வெஜ் பிரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 2 கப்
கிராம்பு - 3
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
பட்டை - 1
பூண்டு - 4 (பொடியாக நறுக்கியது)
வெண்ணை - 1 ஸ்பூன்
பிரக்கோலி - 1/4 கப்
முட்டைக்கோஸ் - 1/4 கப் (நீளமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)
அஜினோமொடொ - 1 சிட்டிகை
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
காலிபிளவர் - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: இனி வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் செய்யலாம்.. ரெசிபி இதோ..!
செய்முறை :
வெஜ் பிரைட் ரைஸ் செய்ய முதலில், எடுத்து வைத்த அரிசியை உதிரியாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் வெண்ணெய், எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பின் அதில் பட்டை, கிராம்பு, பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும். அதன் பிறகு அதில் வெங்காய சேர்த்து நன்கு வதக்கவும். பின் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து காலிபிளவர், ப்ரோக்கோலி, முட்டை கோஸ் என ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கி கொள்ளுங்கள் அதன் பிறகு அதில் அஜினோமொடொ சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். காய்கறிகள் நன்றாக வெந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்
அதன் பின்னர் அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ் இவை இரண்டையும் சேர்த்து சுமார் ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும். பின் அதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். முக்கியமாக அரிசி உடையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக, அதில் எலுமிச்சை சாறு, மிளகுத்தூள், பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் வெஜ் பிரைடு ரைஸ் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D