சிம்பிள் மற்றும் டேஸ்டியான முட்டை பொடிமாஸ்... ரெசிபி இதோ!!
Chettinad muttai Podimas Recipe : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் செட்டிநாடு ஸ்டைலில் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
நீங்கள் முட்டை பிரியரா? முட்டையில் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. தினமும் நம்முடைய உணவில் முட்டையை எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. முட்டையில் பலவிதமான ரெசிபிகள் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அப்படியானால் இன்று முட்டையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் செய்து சாப்பிடுங்கள். உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிகள் பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியையும் நீங்கள் விரும்பி சாப்பிடுவீர்கள்.
இந்த ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாகவும் மற்றும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். சரி வாங்க... இப்போது இந்த பதிவில் செட்டிநாடு ஸ்டைலில் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: கிராமத்து ஸ்டைலில் இப்படி ஒரு முறை முட்டை குழம்பு செய்து பாருங்க... சூப்பரா இருக்கும்..!
செட்டிநாடு முட்டை பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள் :
முட்டை - 7
சீரகம் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: ருசியான முட்டை பிரியாணி.. ஒரு முறை இப்படி செய்ங்க அடிக்கடி செய்வீங்க..
செய்முறை :
செட்டிநாடு ஸ்டைலில் முட்டை பொடிமாஸ் செய்ய முதலில், ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்த முட்டைகளை உடைத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரக, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். அதன் பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்ததாக அதில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இப்போது கலக்கி வைத்த முட்டையை அதில் ஊற்றி நன்கு கிளறி விடுங்கள். வேண்டுமானால் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக முட்டை நன்றாக வெந்ததும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலையை மேலே தூவி விடுங்கள் அவ்வளவுதான் டேஸ்டான செட்டிநாடு முட்டை பொடிமாஸ் ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D