குட்டீசுக்கு பிடிச்ச சீஸ் தோசை.. மொறு மொறுனு இப்படி செஞ்சி கொடுங்க..
Cheese Dosai Recipe : குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் தோசை செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
இன்று காலை உணவாக உங்கள் குழந்தைகள் பிடிச்ச மாதிரி ஏதாவது செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் குழந்தைகள் சீஸ் விரும்பி சாப்பிடுவார்கள் என்றால், அதில் தோசை சுட்டு கொடுங்கள். சீஸ் தோசை சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. சீக்கிரமே செய்து விடலாம். இந்த தோசைக்கு சைடு டிஷ் எதுவும் தேவைப்பாடாது. வெறுமனே சாப்பிடலாம். அவ்வளவு சுவையாக இருக்கும். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் சீஸ் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: காலை உணவாக மொறுமொறுனு சுவையான சோள தோசை.. ரெசிபி இதோ!
சீஸ் தோசை செய்ய தேவையான பொருட்கள் :
தோசை மாவு - தேவையான அளவு
தக்காளி சாஸ் - தேவையான அளவு
மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு (துருவியது)
எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: டயட்டில் இருக்கீங்களா? அப்ப பாசிப்பருப்பில் இப்படி அடை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்டா இருக்கும்!
செய்முறை :
சீஸ் தோசை செய்ய முதலில், தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். தோசை கல் சூடானதும் அதில் எண்ணெய் தடவவும். பின் அதில் எடுத்து வைத்த மாவில் ஒரு கரண்டி ஊற்றி மெல்லியதாக வட்ட வடிவில் சுடவும். அதன் பிறகு எண்ணெயை மாவின் மேல் மற்றும் தோசை சுற்றி ஊற்றவும். பிறகு தக்காளி சாஸை மாவின் மேல் பரப்பவும். பின் அதன் மேல் துருவிய சீஸை தூவி விடவும். தோசையின் அடிப்பகுதி தோசையை திருப்பி போடாமல் எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான சீஸ் தோசை ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D