பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு..! திருச்சி ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்..! 

அடுத்து வரும் இரண்டு வாரங்களில் அந்தமான் தீவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. திருச்சியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் இயற்பியல் பட்டதாரி. இவர் பல ஆண்டுகளாக இயற்கை சீற்றங்கள் பற்றியும். பூகம்பம் பற்றியும், மழை வருவது, வானிலை எச்சரிக்கை என அனைத்தையும் அவ்வப்போது அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். 

அதுமட்டுமல்லாமல் வானிலை மாற்றம் பூகம்பவியல் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளும் இவர் அமெரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு தன்னுடைய ஆய்வினை அவ்வப்போது அளித்து வருகிறார்.இந்நிலையில் ஃபானி புயல் உருவான நிக்கோபார் தீவுக்கு அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் ௫ ஆக இருக்கும். கடந்த சில நாட்களாக புவியியல் மாற்றங்கள் அதிகமாக உள்ளதாலும் அடுத்து வரும் இரண்டு வாரங்களில் 5.5 முதல் 6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறு ஃபானி புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தியதோ அதே போன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தும் என முன்னதாகவே தெரிவித்து உள்ளார். இது போன்ற சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட்டு உயிர் சேதங்களையும் மற்ற சேதங்களையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.